காங்கிரசில் இணைந்த 6 பி.எஸ்.பி கட்சி எம்.எல்.ஏக்கள்
ராஜஸ்தான் மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால், 200 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் அந்த கட்சியின் பலம் 106 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால், 200 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் அந்த கட்சியின் பலம் 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேரும் தங்களின் கடிதத்தை பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷியிடம் நேற்று நள்ளிரவு சென்று வழங்கினார்கள். ஒட்டுமொத்த பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களும் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டதால், அவர்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.