கேரள சட்டமன்ற நிகழ்ச்சியை பார்த்த நிதின் கட்கரி
மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, கேரள சட்டப்பேரவை கூட்டத்தை குடும்பத்தினருடன் பார்த்தார்.
மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, கேரள சட்டப்பேரவை கூட்டத்தை குடும்பத்தினருடன் பார்த்தார். பேரவையின் வி.ஐ.பி காலரியில் அமர்ந்தபடி, நிகழ்ச்சிகளை பார்த்தார். பின்னர், கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோருடன் உரையாடிய பின் அங்கிருந்து புறப்பட்டார். முன்னதாக குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு வந்த அவர், சுற்றுலா தளங்களை கண்டு களித்தார்.