பாமகவின் கொள்கை வழிகாட்டி அம்பேத்கர், அனைவரையும் விட அவரை அதிகம் போற்றுவது தாங்களே என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அம்பேத்கரின் சிலைகளை தகர்க்க பாமக-வினர் திட்டமிட்டிருப்பதாக வதந்தி பரவும் விவகாரத்தில், கடலூர் மாவட்ட காவல்துறையினரின் மோசமான அணுகுமுறையை கடுமையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டார். பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசிய விசிக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாமகவினர் மீது வழக்கு பதிந்து போலீசார் அவதூறு பரப்பி வருவதாக அவர் விமர்சித்தார். மேலும், அம்பேத்கரின் சிலைகளுக்கு நடுநிலையான காவல் அதிகாரிகளின் கண்காணிப்பில் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.