பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்க ஏற்பட்ட கால தாமதத்துக்கு காரணம் தேர்தல் நடத்தை விதிகள் - ஓ.எஸ்.மணியன்
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததே பள்ளி மாணவர்களுக்கான சீருடை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட காரணம் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 40 லட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்கான சீருடைகள் இதுவரை தயாராகவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக தந்தி டி.வி.க்கு பேட்டியளித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஜூன் 15 ஆம் தேதிக்குள் முதல்கட்ட சீருடை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.