பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்களின் வெற்றிகளின் ஒரு தொகுப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Update: 2019-05-23 21:46 GMT
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சமஜ்வாதி கட்சி வேட்பாளர் சாலினி யாதவ் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 159 வாக்குகள் பெற்று 2வது இடத்தை பிடித்தார். வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்க்கு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 548 வாக்குகளுடன் 3வது இடம் மட்டுமே கிடைத்தது.  இதுபோல, குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் அமித்ஷா, 5 லட்சத்து 57 ஆயிரத்து 14 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்   சாவ்டா  3 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில்  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  3 லட்சத்து 47 ஆயிரத்து 302 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தொகுதியில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, 2 லட்சத்து 8 ஆயிரத்து 967 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கனியை பறித்தார். உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை வீழ்த்தி வெற்றி பெற்றா​ர். 
Tags:    

மேலும் செய்திகள்