எதிர்கட்சி அந்தஸ்தை இந்த முறையும் இழந்த காங்கிரஸ்
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 92 இடங்களை மட்டுமே பிடித்து, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 92 இடங்களை மட்டுமே பிடித்து, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 55க்கும் குறைவான இடங்களே கிடைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த மக்களவையை போலவே, இந்த முறையும் எதிர்கட்சி அந்தஸ்தை பெறும் தகுதியை காங்கிரஸ் இழந்துள்ளது. மொத்தம் உள்ள 543 இடங்களில் 10 சதவீதமான 55 இடங்களை பிடிக்கும் கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் வேட்பாளராக பலர் களம் இறங்கிய நிலையில், ஒருவர் கூட எதிர்கட்சித்தலைவர் அந்தஸ்தை பெறவில்லை.