விஸ்வரூபம் எடுத்த பிரதமர் நரேந்திரமோடி
மக்களவை தேர்தலில், பாஜகவுக்கு இமாலய வெற்றி கிடைத்துள்ளது.
மக்களவை தேர்தலில், பாஜகவுக்கு இமாலய வெற்றி கிடைத்துள்ளது. இதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரதமர் நரேந்திரமோடி, புதிய சாதனை படைத்துள்ளார். மக்களவை தேர்தலில், பாஜகவின் இமாலய வெற்றியின் மூலம் தேசிய அரசியலில், பிரதமர் நரேந்திரமோடி, ஒரு வலுவான - சக்தி மிக்க - அசைக்க முடியாத மாபெரும் தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறார். காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் 2- வது முறையாக மீண்டும்
5 ஆண்டுகளுக்கு ஆட்சியை உறுதி செய்து, பிரதமர் நரேந்திரமோடி புதிய சாதனை படைத்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் கடைசி நிலவரப்படி, ஆட்சிக்கு தேவையான 272 என்ற மேஜிக் நம்பரை தாண்டி, தனிப்பெரும் கட்சியாக பாஜக 300 தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியை மீண்டும் உறுதி செய்த பிரதமர் மோடி, இமாலய வெற்றிக்கு, ஓற்றை முகமாக விளங்குகிறார். நாடு முழுவதும் சுற்றி சுழன்று, பிரதமர் மோடி மேற்கொண்ட சூறாவளி தேர்தல் பிரசாரம் பாஜகவுக்கு இமாலய வெற்றியை கொடுத்துள்ளது. ஜி.எஸ்.டி விவகாரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ரபேல் போர் விமான ஊழல் என எதிர்க்கட்சிகள் பிரயோகித்த குற்றச்சாட்டுக்கள் எதுவும் மக்களிடம் எடுபடவில்லை. மாறாக, துல்லிய தாக்குதல் - தீவிரவாதிகளுக்கு எதிரான உறுதிமிக்க நடவடிக்கை - மேக் இன் இந்தியா திட்டம் - விவசாயிகளுக்கு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று, பாஜகவுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர்.