உள்ளாட்சித் தேர்தல் நடத்த அவகாசம் கோரியதற்கு ஸ்டாலின் கண்டனம்
உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று மாநில தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறி கால அவகாசம் கேட்பது கண்டனத்துரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், ஜனநாயகத்தை அடியோடு பாழ்படுத்தி விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். மே 31 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்தும், உச்சநீதிமன்றத்தில் மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் கோரியுள்ளதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். மாநில தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறி பதில் மனுக்களை தாக்கல் செய்து ஒரு "சிறுபிள்ளைத்தனமான" விளையாட்டை நடத்துவதாக கூறி, ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில தேர்தல் ஆணையர் தாமாக முன் வந்து, உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தெரிவித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.