- கன்னியாகுமரியில், அதிமுக விளம்பர பலகையில் காங்கிரஸ் நிர்வாகி படம் இடம் பெற்றது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட அதிமுக கழக கள ஆய்விற்காக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, அருணாச்சலம் உள்ளிட்டோர் நாளை வரவுள்ளனர். அதையொட்டி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் அக்ஷயா கண்ணன் விளம்பர பலகை அமைத்துள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் எம்.பி.,யான மறைந்த அருணாச்சலத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. கழக அமைப்புச் செயலாளர் அருணாச்சலத்தின் படத்திற்கு பதிலாக, தவறுதலாக, காங்கிரஸ் நிர்வாகியின் புகைப்படம் இடம்பெற்ற சம்பவம் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விளம்பரப்பலகை அகற்றப்பட்டது.