தாய் இறந்த‌தை பார்த்து மனமுடைந்த மகன் தற்கொலை - அதிர்ச்சி

Update: 2024-11-20 13:07 GMT
  • தஞ்சாவூரில், இறந்த தாய் உடலை பார்த்து மனமுடைந்த மகன், தூக்கிட்டு தற்கொலை செய்த‌து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
  • தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் ராகுல். இவரும், இவரது தாய் ஈஸ்வரியும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், 2 நாட்களாக இவர்களது வீடு திறக்கப்படாமல் பூட்டப்பட்டு, துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அளித்த புகார் அடிப்படையில், கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ஈஸ்வரி சடலமாகவும், ராகுல் தூக்கிட்ட நிலையில் சடலமாகவும் கிடந்த‌தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 2 உடல்களையும் மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாரடைப்பால் ஈஸ்வரி உயிரிழந்த‌தாகவும், அதனால் மனமுடைந்து ராகுல் தற்கொலை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்