வருமான வரி அதிகாரிகளை வரவேற்க காத்திருக்கிறோம் - ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு
தமக்கு சொந்தமான இடங்களில் எந்த நேரத்திலும், வருமான வரி சோதனை நடைபெறலாம் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமக்கு சொந்தமான இடங்களில் எந்த நேரத்திலும், வருமான வரி சோதனை நடைபெறலாம் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். வருமான வரித் துறை அதிகாரிகளை வரவேற்க காத்திருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகளை முடக்கவே, இந்த நடவடிக்கை என்பது தெரிந்த செய்தி தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசின் அத்து மீறல்களை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள், தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.