"ஊழல் செய்தவர்கள் அனைவருக்கும் 2019 க்குள் ஜெயில்" : தொண்டர்களிடம் உரையாற்றிய மோடி

ஊழல் செய்த ஓவ்வொருவரும் அவர்கள் செய்த ஊழல் பணத்தை நாட்டிற்கு திரும்ப கட்டியாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2019-04-01 05:40 GMT
ஈரோடு பாஜகவினரிடையே காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசுகையில், 2019 ஆம் ஆண்டு முடிவதற்குள் ஊழல் வாதிகள் அனைவரும் ஜெயிலுக்கு சென்றிருப்பார்கள் என்று கூறினார். 90 ஆயிரம் கோடி ரூபாயை அரசிடம் இருந்து எடுத்துச் சென்றவர்களிடம் இருந்து தற்போது 14 ஆயிரம் கோடி திரும்ப பெற்றுள்ளோம் என்றும், ஊழல் செய்த ஒவ்வொருவரும், ஊழல் பணத்தை நாட்டிற்கு திரும்ப கட்டியாக வேண்டும் என்றும் கூறினார்.

தேர்தல் நேரத்தில் மோடி பிஸியாக இருப்பார் என்று பாகிஸ்தான்  நினைத்து கொள்கிறது, ஆனால் நான் அப்படி இல்லை, அதேபோல பயிற்சி இடத்தை மட்டும்தானே இந்தியா கண்டு பிடித்தது என்று மட்டுமே நினைத்து கொண்டுள்ளனர். 40 வருடமாக தீவிரவாதிகள் எங்கிருந்து செயல்பட்டு வருகின்றனர் என்பதும் இதனை இயக்குகிற ரிமோட் கண்ட்ரோல் யார் என்று தெரியும் அதனால் தான் அதனை இயக்குகிற இடத்தில் இருந்து அடிக்கிறோம் என்றும் கூறினார். நிழ்ச்சியில் பஜகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 500க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றுனர்.
Tags:    

மேலும் செய்திகள்