கூட்டணி குறித்த சர்ச்சை நிலவும் சூழலில் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் வைகோ

திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்திக்கிறார்.

Update: 2018-11-28 02:34 GMT
திமுக தலைவர் ஸ்டாலினை  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்திக்கிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 4 மணி அளவில், இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன், தந்தி டி.வி-க்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இந்த கருத்து ம.தி.மு.க.-வினர் மனதை காயப்படுத்திவிட்டதாக வைகோ கூறியிருந்தார். இந்தநிலையில், இன்றைய ஸ்டாலின் - வைகோ சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்