"தேனி மாவட்டத்தில் 500 ஏக்கரில் உணவுப் பூங்கா" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

தேனி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்கா அமைய இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-13 03:16 GMT
தேனி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்கா அமைய இருப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். போடி சங்கராபுரம் பகுதியில் சிப்காட் நிலம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைப்பதற்கு, தனியார் நிறுவனங்கள் முன்வந்தால் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றார். 

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில், பேபி அணையை பலப்படுத்துவதற்கு 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்றும், ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்