பணக்கார நண்பர்களுக்கு மட்டுமே வங்கி கடன் வழங்கும் மோடி - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி தமது பணக்கார நண்பர்களுக்கு மட்டுமே வங்கி கடன் வழங்குவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2018-09-28 02:42 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது . இதையொட்டி அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரேவா, சட்னா மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசிய அவர் பாஜக அரசு மீது சரமாரியாக புகார் தெரிவித்தார். ரபேல் போர்விமான ஒப்பந்தத்தை அனில் அம்பானி நிறுவனத்திற்கு வழங்கியது ஏன் என கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி தமது பணக்கார நண்பர்களுக்கு மட்டுமே வங்கி கடன் வழங்குவதாக குற்றம் சாட்டினார். 

ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்கப்படும் என்று கூறினார். வாகனத்தில் ஊர்வலமாய் சென்ற ராகுல்காந்திக்கு வழியெங்கும் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்