"பேரணியில் ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள்" - அழகிரி
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி நினைவிடம் நோக்கி வரும் செப்டம்பர் 5 ம் தேதி அமைதி பேரணி நடத்தப்படும் என அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி நினைவிடம் நோக்கி, வரும் செப்டம்பர் 5 ம் தேதி அமைதி பேரணி நடத்தப்படும் என அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் மதுரை, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட தென் மாவட்டங்களை சேர்ந்த அழகிரியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பேசிய அழகிரி, தொண்டர்களின் எழுச்சி நிறைவாக இருந்தது, பேரணியில் ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்றார்.