ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் - காங்கிரஸ் எதிர்ப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் தொடர்பாக சட்ட ஆணையம், அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, இத்திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார். பாஜகவின் சுய லாபத்திற்காக செயல்படுவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார். இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமாயின் சட்டமன்றத்தை பாதியிலேயே கலைக்க வேண்டியது இருக்கும் என்றும், அது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பது போலாகும் என்றும் அபிஷேக் மனு சிங்வி புகார் கூறினார்.