கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம்: நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப திட்டம்.
காவிரி மேலாண்மை ஆணையம் விவகாரத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத விதிமுறைகளை எதிர்த்து போராட உள்ளதாக, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் டெல்டா பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களுடன் ஆலோசனைக் கூட்டம், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணையம் விவகாரத்தில், அடுத்தகட்ட முடிவு எடுப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
கர்நாடக தரப்பில் எந்த மாதிரியான வாதங்களை முன்வைப்பது, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்றத்தில், இது குறித்து கேள்வி எழுப்புவது, குறித்து இந்த கூட்டத்தில், விவாதிக்கப்பட்டது. தங்கள் கருத்தைக் கேட்காமலே மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. நாங்கள் அரசியலமைப்பு முடிவுகளை என்றென்றும் ஏற்றுக் கொண்டுள்ளேம். உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் உரிய மதிப்பு, மரியாதை அளிக்கிறோம். மேலாண்மை ஆணையம் அமைத்ததில் எங்களுக்கு 2,3 விஷயங்கள் திருப்தி அளிக்கவில்லை. எனவே, அந்த விவகாரங்களுக்கு எதிராக நாங்கள் போராடுவோம்.