வேல்முருகனுக்கு மேலும் 15 நாட்கள் சிறை தண்டனை - விழுப்புரம் நீதிமன்றம்
வேல்முருகனுக்கு மேலும் 15 நாட்கள் சிறை தண்டனை - விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விழுப்புரம் அருகே சுங்க சாவடி மீது தாக்குதல் நடத்திய வழக்கில் வேல்முருகனுக்கு ஜாமீன் கோரிய வழக்கு இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு மேலும் 15
நாள் காவல் நீட்டித்து வரும் 22ஆம் தேதி வரை சிறையின் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வேல்முருகன் கைதுக்கு எதிர்ப்பு
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை கைது செய்ததை கண்டித்து கடலூரில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்து வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.