பைக் பின்னால் தங்கை சடலம்.. அழுதபடியே ஓட்டி சென்ற அண்ணன் - உபியை உலுக்கிய கோர காட்சிகள்
உத்தரபிரதேசத்தில் சகோதரியின் சடலத்தை ஒருவர் இருசக்கர வாகனத்தில் சுமந்து சென்ற வீடியோ வேகமாக பரவி வருகிறது. அவுரியா மாவட்டத்தில் பிரதாப் சிங் என்பவரது மகள் குளிப்பதற்கு வெந்நீர் வைத்த போது எதிர்பாராத விதமாக மின்சார தாக்கி மயக்கமடைந்தார். பின்னர் பிதுனா அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும், மருத்துவமனை தரப்பில் ஆம்புலன்ஸ் தராததால், சிறுமியின் சடலத்தை அவரது சகோதரர் பைக்கில் சுமந்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த புகாரை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.