நிறைவேறிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதா.. நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு கூட்டத்தொடர் முடிவுக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர்18-ஆம் தேதி தொடங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே கூட்டத்தொடர் முடித்துக் கொள்ளப்பட்டது.