சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் பம்பையில் இருந்து பக்தர்களுடன் நிலக்கல்லுக்கு சென்ற அரசு பேருந்து அத்திவலம் என்ற இடத்தருகே சென்றபோது தீப்பிடித்து எரிந்தது. பேருந்து தீப்பிடித்ததும் பக்தர்களும் ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் உடனடியாக கீழே இறங்கியதால் காயமின்றி உயிர் தப்பினர். இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு வரை தகுதிச்சான்று பெற்றுள்ள பேருந்து, தீயில் எரிந்தது எப்படி என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு விசாரணை அறிக்கை செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படும் என்று கேரள அரசு போக்குவரத்து கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி. தெரிவித்துள்ளது.