நாட்டை உலுக்கிய மருத்துவ மாணவி கொலை - குற்றவாளியை காட்டி கொடுத்த ப்ளுடூத் ஹெட்போன்

Update: 2024-08-12 11:57 GMT

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த முதுநிலை பயிற்சி மாணவி காலையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக கொல்கத்தா போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவியை கொன்று, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.இதனைத் தொடர்ந்து மாணவி கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்த ப்ளூடூத் ஹெட்போன் மூலம் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனை வளாகத்தில் வைத்து மாணவியை கொலை செய்து, அதன்பின் பாலியல் வன்கொடுமை செய்ததாக சஞ்சய் ராய் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.சம்பவத்தின் போது அவரது ப்ளூடூத் ஹெட்போனை விட்டு சென்றதும், அது அவருடைய போனுடன் இணைப்பில் இருந்ததால் அதன் மூலமாக கொலையாளியை கைது செய்துள்ளதாக கொல்கத்தா போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்