சந்தேஷ்காளி கிராம விவகாரம் - பா.ஜ.க. குழுவை தடுத்து நிறுத்திய போலீசார்

Update: 2024-02-16 13:12 GMT

மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காளி கிராம விவகாரம் தொடர்பாக நேரில் பார்வையிடச் சென்ற பா.ஜ.க. குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். சந்தேஷ்காளி கிராமத்தில், திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த ஷேக் ஷாஜகானின் கும்பல், நிலத்தை அபகரித்ததாகவும், பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரிக்க 6 உறுப்பினர்கள் கொண்ட குழுவை பா.ஜ.க. மேலிடம் அமைத்தது. இந்நிலையில், நேரில் வி​சாரிக்கச் சென்ற பா.ஜ.க. குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்