புதைபூமியில் பூத்த புன்னகை... ``எத்தனை கோடிகள்..?'' - பினராயி சொன்ன சேதி
கேரள மாநிலம் வயநாடு பேரிடர் தொடர்பாக, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை சுமார் 54 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் நிவாரண நிதியில் இதுவரை 53 கோடியே 98 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும், ஜூலை 30ம் தேதி முதல் பெறப்படும் ஒவ்வொரு ரூபாயும் வயநாடு பேரிடருக்கு செலவிடப்படும் என்றும் தெரிவித்தார். போர்டல் மற்றும் யுபிஐ மூலம் கிடைக்கும் தொகை விவரங்கள் துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் நிதி அளித்துள்ளதாகத் தெரிவித்தார். சிலர் 5 நாள் ஊதியத்தை வழங்க முன்வந்துள்ள நிலையில், அதனை ஒரே தொகுப்பாக அடுத்த மாத சம்பளத்தில் தரலாம் என்றும், தவணை முறையில் அடுத்த மாதம் ஒருநாள் சம்பளமும், அடுத்த 2 மாதங்களில் தலா 2 நாட்களும் வழங்கலாம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.