வயநாட்டில் மறுபிறவி எடுத்த மக்களுக்கு கேரள அரசு சொன்ன சேதி
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு பணிகளை 3 கட்டங்களாக நிறைவேற்ற கேரள அமைச்சரவை உபக்குழு திட்டமிட்டுள்ளது...முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன... அரசு செலவிலேயே வாடகை வீடு ஏற்பாடு செய்வது, அரசு கட்டடங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவகாரத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களுக்கு பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து வரவேண்டிய பணத்திற்காக தற்போது வசூல் செய்யக்கூடாது எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது...