அரசு பேருந்தில் டிரைவர், கண்டக்டர் கொடூர மோதல் - பரபரப்பு காட்சிகள்

Update: 2024-11-15 04:23 GMT

கர்நாடகாவில் அரசு பேருந்தில் டிக்கெட் கொடுக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் நடத்துநர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கதக் மாவட்டத்தில் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தபோது, டிக்கெட் கொடுப்பதற்காக நடத்துநர் கிருஷ்ணா நாயக் என்பவர் பாதி வழியில் பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால் தங்களுக்கு கால தாமதம் ஏற்படுவதாக கூறி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த மோதலில் நடத்துநர் மட்டுமன்றி, ஓட்டுநரும் தாக்கப்பட்டார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்