வயநாடு மக்களுக்காக மொய் விருந்து... பேரன்பு காட்டும் தமிழக மக்கள்
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் சொந்தங்களையும் உடைமைகளையும் இழந்து வாடும் மக்களுக்கு உதவ, திண்டுக்கல்லில் மொய் விருந்து நடத்தப்பட்டது. திண்டுக்கல்லை சேர்ந்த முஜீப் பிரியாணி, திண்டுக்கல் ஹோட்டல் அசோசியேஷன் மற்றும் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் இணைந்து இந்த பிரியாணி மொய் விருந்தை நடத்தியது. இதில் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, பீர்நீ, தயிர் வெங்காயம், தால்சா மற்றும் நெய் சாதம் ஆகியவை வழங்கப்பட்டது. அங்கு சாப்பிட வந்தவர்கள் சாப்பிட்டு முடித்த பின், இலைக்கு அடியில் தங்களால் முடிந்த அளவு பணத்தை மொய்யாக வைத்து விட்டு சென்றனர். இந்த மொய் விருந்து மூலம் கிடைக்கப்பெற்ற பணம் வயநாடு மக்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.