ஒரு சிறு நூல் போல ஓடும் இந்த குட்டி ஆறுதான் பேரழிவின்- அரக்கன் யாரும் பார்க்கா கோணத்தில் தந்தி டிவி

Update: 2024-08-08 11:38 GMT

வயநாடு நிலச்சரிவு நடந்த இடத்திற்கு மிக அருகே அமைந்துள்ள தனியார் ரிசார்ட்டுகள் சில நல்வாய்ப்பாக தப்பித்த நிலையில் அங்குள்ள கண்ணாடி பாலத்தில் இருந்து நிலச்சரிவின் கோரத்தை தந்தி தொலைக்காட்சி படம்பிடித்துள்ளது... இது குறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

பூமியைப் பிளந்து கொண்டு காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடி... நிலச்சரிவு எனும் அரக்கன் 3 கிராமங்களை மண்ணோடு சமாதியாக்கியது இங்கிருந்து ஒரே கிலோ மீட்டர் தூரம் தான்... 3 ஊர்களை அழித்த அரக்கனின் பார்வையிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டது இந்த தனியார் ரிசார்ட்...கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் முண்டகை, சூரல் மலை, பூஞ்சேரி மட்டம் கிராமங்கள் தரைமட்டமாகி விட்டன...

வீடுகள், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டன...ஆனால்... முண்டகையில் இருந்து பூஞ்சேரிமட்டம் செல்லும் வழியில் உள்ள தனியார் சொகுசு விடுதி எப்படியோ தப்பி விட்டது...

இங்கு சுற்றுலாப்பயணிகளுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தைத் தர வெளிநாடுகளைப் போல்... மலை உச்சியில் 10மீட்டருக்கு கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில்... இங்கிருந்து நிலச்சரிவின் கோரத் தாண்டவத்தை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது...

ஏற்கனவே வன ராணி மற்றும் மற்றொரு ரிசார்ட்டில் தங்கி இருந்த 19 சுற்றுலாப் பயணிகள் சடலமாக மீட்கப்பட்டது நாம் அறிந்ததே...

பாதிக்கப்பட்ட நபர்கள், வீடுகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில்... சுற்றுலா பயணிகள் வருகை குறித்து அறிய... அவர்கள் தங்கி இருந்த தனியார் ரிசார்ட்டுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களைக் கைப்பற்றி விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது... நிலச்சரிவின் கோரமான காட்சிகளும் கூட இந்த தனியார் ரிசார்ட்டுகளின் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கலாம்...

நிலச்சரிவில் எத்தனை சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்துள்ளனர்?...மாயமாகியுள்ளனர்?... என்பது குறித்த விவரங்கள் இனி ஒவ்வொன்றாகத் தெரிய வரும்...

தந்தி தொலைக்காட்சி செய்திகளுக்காக இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட வயநாடு களத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் காலினுடன் செய்தியாளர் கார்த்திக்...

Tags:    

மேலும் செய்திகள்