வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பிற்காக, முதற்கட்டமாக 900 கோடி ரூபாய் வழங்குமாறு மத்திய அரசிடம் கேரள அரசு கோரியுள்ளது. நகரியம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கான
நடவடிக்கைகள் போன்றவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள
அரசு மதிப்பீடு செய்துள்ளது. மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து கேரளா அரசு தற்போது காத்திருக்கிறது.