மகா கும்பமேளா கோலாகலம்.. கோடிக்கணக்கில் குவிந்த பக்தர்கள் - வியப்பூட்டும் வீடியோ

Update: 2025-01-15 12:44 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர். 12 ஆண்டுகளுக்குப்பின் மகாகும்பமேளா விழா கடந்த 13ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், முதல் 2 நாளில் மட்டும் சுமார் 5 கோடி பக்தர்கள் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 3வது நாளாக இன்று, திரளான பக்தர்கள் புனித நீராடினர்.

Tags:    

மேலும் செய்திகள்