வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரின் கடனை தள்ளுபடி செய்வதற்கு கேரள உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு கால அவகாசம் கேட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக கேரளா உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதையொட்டி நேற்று நடைபெற்ற விசாரணையின்போது,
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரின் கடனை தள்ளுபடி செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு கால அவகாசம் கேட்டுக் கொண்டது.
6 வாரங்களில் அனைத்து விவகாரங்களுக்கும் முடிவு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேரிடர் மேலாண்மை திட்டங்கள் தொடர்பாக மத்திய மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய புவியியல் ஆய்வு மையம் ஆகியவை பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.