யாருக்கும் தெரியாமல் காதலியை சந்திக்க காதலன் செலக்ட் செய்த ஆடை - வெளுத்தெடுத்த மக்கள்.. கையில் இருந்த அதிர்ச்சி பொருள்
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், ஒரு நபர் தனது காதலியை சந்திக்க பர்தா அணிந்து சென்ற போது குழந்தைகளைக் கடத்துபவர் என எண்ணி பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்தா அணிந்து சென்ற அந்த இளைஞரை பொதுமக்கள் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது... போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த இளைஞரிடம் இருந்து கைத்துப்பாக்கி வடிவிலான லைட்டரும் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.