நீட் மட்டுமல்ல... சர்ச்சையில் UPSC - அதிர வைத்த பூஜா கேத்கர்... தோண்ட தோண்ட அதிர்ச்சி

Update: 2024-07-17 16:32 GMT

மகாராஷ்டிராவின் பயிற்சி ஐ.ஏ.எஸ் பூஜா கேத்கர் குறித்து தினமும் புதிய புதிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன... அவர் தனது ரேஷன் கார்டை தவறான முகவரி மூலம் பெற்றதாகவும், இதைப் பயன்படுத்தியே மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புனே மாவட்டம் பிம்ப்ரியில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் நினைவு மருத்துவமனையில் சான்றிதழ் பெற்றுள்ளார்... இதற்காக அவர் தனது முகவரியை பிம்ப்ரி சின்ச்வாட் பகுதி என மாற்றி கொடுத்துள்ளார். இந்த முகவரி உண்மையில் செயல்பாட்டில் அல்லாத நிறுவனமான தெர்மோவெரிட்டா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் என்பதன் பதிவு

முகவரி என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதே சமயம் பூஜா கேத்கர் பயன்படுத்திய சொகுசு கார், தெர்மோவெரிடா நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்றும் இந்த நிறுவனத்திற்கு கடந்த ஆண்டில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான வரி நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்