கல்யாணம் பண்ணிக்கிட்டா 51,000 ருபாய்...மண்டபத்தில் குவிந்த சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்ஸ்
கடந்த ஜனவரி 25ம் தேதி, உத்தரப் பிரதேச முதல்வர் குழுத் திருமணத் திட்டத்தின் கீழ் 568 ஜோடிகளுக்கு பல்லியா மாவட்டத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் நடைபெற்ற மோசடி என்னவென்றால் பல மணப்பெண்களுக்கு மணமகன்களே இல்லாமல் மாலை அணிவிக்கப்பட்டு திருமணம் நடந்தேறியுள்ளது... வந்திருந்தவர்களில் பலருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடைபெற்று விட்டதாம்... நிறைய ஜோடிகள் சகோதர சகோதரிகள் என்பதும் அம்பலமாகியுள்ளது... இத்திட்டத்தில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு 51 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் நிலையில், ஜோடிகளாகக் காட்டி அரசு தரும் பணத்தைப் பெறுவதற்காக மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது...