டிரம்ப் vs கமலா ஹாரிஸ்...உலகமே உற்றுநோக்கும் விவாதம்... பரபரப்பில் அமெரிக்கா

Update: 2024-09-10 05:06 GMT

டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையேயான நேரடி விவாத நிகழ்ச்சி, இந்திய நேரப்படி நாளை புதன்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட நேரடி விவாதம், பிலடெல்பியாவில் நடைபெற உள்ளது. இதில், டிரம்பும் கமலா ஹாரிசும் 90 நிமிடங்கள் வாதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பார்வையாளர்கள் யாரும் இல்லாமல், நேரலையாக விவாத‌த்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவாதம், இந்திய நேரப்படி நாளை புதன்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும். அதிபர் வேட்பாளர்களுக்கான முதல் விவாதத்தில் அதிபர் பைடன் சொதப்பியது, அவரது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், டிரம்ப்பை விவாதத்தில் எதிர்கொள்கிறார். உலகமே உற்றுநோக்கும் இந்த விவாத நிகழ்ச்சி, பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்