15 உயிர்களை காவு வாங்கி அந்தரத்தில் தொங்கிய ரயில்.. பைக்கில் ஸ்பாட்டுக்கு வந்த ரயில்வே அமைச்சர்
ரயில் விபத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ரங்காபாணி பகுதியில் பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ரயில் விபத்து நடைபெற்ற இடத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில் விபத்து ஏற்பட்ட பகுதி பிரதான வழித்தடம் என்பதால் சீரமைப்பு நடவடிக்கையில் தான் முழு கவனமும் இருப்பதாகவும், மீட்பு பணி நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல எனக் கூறிய அஸ்வினி வைஷ்ணவ், ரயில் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக, விபத்தை நடந்த இடைத்தை பார்வையிடுவதற்காக, இரு சக்கர வாகனத்தில், ரயில்வே அமைச்சர் பயணம் மேற்கொண்டார்...