மாறிய காற்றின் திசை..அடுத்த 2 நாட்கள்...வானிலை மையம் கொடுத்த வார்னிங்
அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல கீழடுக்குகளில் ஏற்பட்டுள்ள காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அடுத்த 5 தினங்களில் வளிமண்டல வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்பதால் வெப்பத்தின் தாக்கம் சிறிது குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.