திருப்பதி விஐபி டிக்கெட்டை பிளாக்கில் விற்ற துணைத் தலைவர்..! அதிரடி காட்டிய ஆந்திர காவல்துறை

Update: 2024-10-21 02:23 GMT

திருப்பதி விஐபி டிக்கெட்டை பிளாக்கில் விற்ற துணைத் தலைவர்..! அதிரடி காட்டிய ஆந்திர காவல்துறை


பெங்களூரை சேர்ந்த சாய்குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி மலையில் ஏழுமலையானை கும்பிடுவதற்காக வரிசையில் சென்று கொண்டிருந்தார். அவருடைய டிக்கெட்டை வாங்கிப் பார்த்த ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், தேவஸ்தான ஊழல் கண்காணிப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வந்து விசாரித்தபோது, 500 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகளை 65 ஆயிரம் ரூபாய் கொடுத்து அவர்கள் வாங்கியது தெரியவந்தது. இந்த டிக்கெட்டுகளை ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர சட்ட மேலவை துணைத்தலைவர் மாயன்னா ஜாகியா கானத்தின் பரிந்துரையின்படி பெற்றதாக தெரிவித்தார். இதுதொடர்பாக, மாயன்னா ஜாகியா கானம், அவருடைய உதவியாளர் கிருஷ்ணதேஜா உள்பட மூன்று பேர் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

திருப்பதியில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்றதாக ஆந்திர மேலவை துணைத் தலைவர் உள்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்