அச்சுறுத்தும் நிபா வைரஸ் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் - பீதியில் கேரள மக்கள்
கேரளாவில் நிபா பாதிப்பு தொடர்பு பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 80 ஐ எட்டியுள்ளது.
கடந்த மாதம் 30ஆம் தேதி உயிரிழந்த மருதோன்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு நிபா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மூலமாக கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியதை சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது.
தற்போது வரை 4 பேர் நிபாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தததாக கோழிக்கோட்டில் 327 சுகாதாரப் பணியாளர்கள், 29 பேர் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தொடர்பு பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 80 ஐ எட்டியுள்ளது. அவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.