"போதை ஏற்ற பணம் தரல"...தாத்தா பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரன்..நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-07-27 02:37 GMT

கேரள மாநிலம் வடக்கேகாடு பகுதியை சேர்ந்த அப்துல் - ஜமிலா தம்பதி, தங்களது மகள் வயிற்று பேரனான அக்மலை சிறுவயது முதல் வளர்த்து வந்துள்ளனர். போதைப்பழக்கத்திற்கு அடிமையான அக்மல், தன்னிலை மறந்து தனது தாத்தா - பாட்டியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போதை பொருள் வாங்குவதற்காக அக்மல் பணம் கேட்ட நிலையில், அதற்கு அப்துல் - ஜமிலா தம்பதி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அக்மல் இருவரையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளான். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் தலைமறைவாக இருந்த அக்மலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்