பழைய நாடாளுமன்றத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலும் இந்தியாவை வடிவமைத்தவர்களின் அர்ப்பணிப்பை எதிரொலிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய புகைப்படங்களை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்
புதிய நாடாளுமன்றத்திற்குள் நுழைந்திருக்கும் இந்த வேளையில் நாடாளுமன்றம் ஒரு கட்டிடமாக மட்டுமல்லாமல் நமது நாட்டின் வளமான ஜனநாயக பாரம்பரியத்தின் சாட்சியாக நாம் நினைவு கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். பழைய நாடாளுமன்றத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலும் இந்தியாவை வடிவமைத்தவர்களின் அர்ப்பணிப்பு விவாதங்கள் முடிவுகள் போன்றவற்றை எதிரொலிப்பதாக குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் சேவை ஆற்றிய மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக பங்காற்றிய உன்னத நபர்களிடமிருந்து நாம் எப்போதும் உத்வேகம் பெறுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.