நாட்டையே அதிரவைத்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு... மீண்டும் அதில் கை வைத்த புது மனு

Update: 2024-04-15 05:14 GMT

#electionbond | #supremecourt | #electoralbonds

நாட்டையே அதிரவைத்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு... மீண்டும் அதில் கை வைத்த புது மனு

தேர்தல் நிதி பத்திர திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நிதி பத்திர திட்டத்துக்கு தடை கோரி ஏடிஆர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, அனாமதேய தேர்தல் நிதி பத்திர திட்டம், வாக்காளர்களின் தகவல் அறியும் உரிமைக்கும், கருத்துரிமைக்கும் எதிரானது என்று கூறி, அதுதொடர்பான சட்டத்தை ரத்து செய்வதாக கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி அறிவித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, மூத்த வழக்குரைஞர் மேத்யூஸ் ஜெ.நெடும்பறா, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தேர்தல் நிதி பத்திரத் திட்டம் தொடர்பான சட்டப்பிரிவுகள் அனைத்தும் நாடாளுமன்ற வரம்பிற்குள் வருவதால் அவற்றை உச்சநீதிமன்றம் தீர்மானித்திருக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியவர்கள் அனைவரையும் ஊழல் செய்தவர்கள் என்று கூற முடியாது என்பதால் அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்