டெல்லியில் செயற்கை மழை பொழியச் செய்வது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு, டெல்லி மாநில அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், காற்று மாசை கட்டுப்படுத்த, டெல்லி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அண்டை
மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள், டீசல் பேருந்துகள் நுழைவதை தடை செய்யுமாறு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். காற்று மாசு தொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டத்தைக் கூட்டி டெல்லியில் செயற்கை மழை பொழிவது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்று இதில் கோபால் ராய் குறிப்பிட்டுள்ளார். ஹரியானா, பஞ்சாப் மற்றும் அண்டை பகுதிகளில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.