பொற்கோயில் மீது ராணுவ தாக்குதல் காரணம்.. சீக்கிய மெய் காவலர்களை மாற்ற மறுத்த இந்திரா..
- இந்தியாவின் முதல் பிரதமரும், சுதந்திர போராட்ட வீரருமான ஜவஹர்கால் நேருவின் ஒரே மகளான இந்திரா காந்தி, இளம் வயதிலேயே அரசியல் ஆர்வம் கொண்டிருந்தார்.
- 1964ல் நேரு மறைந்த பின், லால் பகதூர் சாஸ்திரி அரசில் மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சரான இந்திரா, 1967 ஜனவரியில் இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கொந்தளிப்பான 1970 களின் மத்தியில், அவசர நிலை பிரகடனம் செய்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
- 1980களின் தொடக்கத்தில் பஞ்சாபில் தீவிரவாதம்
- தலை தூக்கியது. சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி, பிந்திரன்வாலே தலைமையில் காலிஸ்தான் இயக்கம் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுத்தது.
- அமிர்தசரஸ் பொற்கோயிலை ஆக்கிரமித்த பிந்திரன்வாலே
- அதை ராணுவ முகாமாக மாற்றி, ஏராளமான ஆயுதங்களை
- அங்கு குவித்தார்.
- 1984 ஜூனில், பொற்கோயிலை மீட்க, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், பிந்தரன்வாலே உள்ளிட்ட 400 சீக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பொற்கோயிலின் புனிதத்தை காக்க தவறியதாக, இந்திரா காந்தி மீது சீக்கியர்கள் கடும் கோபம் கொண்டனர்.
- இதைத் தொடர்ந்து இந்திரா காந்தியின் மெய்க் காவல் படையில் இருந்த சீக்கிய ராணுவ வீரர்களை நீக்க, உளவுத் துறை பரிந்துரை செய்தது. ஆனால் இந்திரா காந்தி, தனது சீக்கிய மெய்க்காவலர்களின் விசுவாசத்தை சந்தேகிக்க
- மறுத்து, அவர்களை மாற்ற தடை விதித்தார்.
- இந்நிலையில், 1984 அக்டோபர் 31 அன்று, காலை 9.20 மணிக்கு, தனது அலுவலகத்திற்கு நடந்து சென்ற இந்திராவை, அவரின் சீக்கிய மெய்க்காவலர்களான பீந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் சுட்டுக் கொன்றனர். இதர மெய்காவலர்கள் பீந்த் சிங்கை உடனடியாக சுட்டுக் கொன்றனர். சத்வந்த் சிங் கைது செய்யப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டார்.
- இந்திரா காந்தியின் படுகொலை, இந்தியா முழுவதும் அதிரவலைகளை ஏற்படுத்தியது. சீக்கிய இன மக்கள் மீது பொது மக்களின் கோபம் திரும்பி, பல்வேறு இடங்களில் அவர்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. டெல்லி மற்றும் பல்வேறு வட இந்திய நகரங்களில் சுமார் 8,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
- அடுத்த பிரதமராக பதவியேற்ற ராஜீவ் காந்தி, கலவரத்தை அடக்க இரண்டு நாட்கள் கழித்து ராணுவத்தை வரவழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம், 1984 அக்டோபர் 31.