ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை..இறந்த குழந்தையோடு பேருந்தில் சென்ற மாமா - மனதை ரணமாக்கும் வீடியோ

Update: 2022-10-20 10:08 GMT

ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை..இறந்த குழந்தையோடு பேருந்தில் சென்ற மாமா - மனதை ரணமாக்கும் வீடியோ

மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸூக்கு காசு இல்லாததால் இறந்த குழந்தை தோளில் சுமந்து கொண்டு ஒருவர் பேருந்தில் பயணம் மேற்கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்தர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், விபத்தில் மரணமடைந்த நான்கு வயது குழந்தைக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது.

அதன் பிறகு அருகே உள்ள தனது கிராமத்திற்கு சடலத்தை எடுத்து செல்ல மருத்துவமனை நிர்வாகமோ ஆம்புலன்ஸ் தராத நிலையில், கையில் காசும் இல்லாததால் குழந்தையின் மாமா செய்வதறியாது தவித்துள்ளார்.

பின்னர் குழந்தையின் சடலத்துடன் பேருந்தில் அவர் ஏறி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அவரின் நிலை கண்டு பரிதாபம் கொண்ட சக பயணி ஒருவர் தான் அவருக்கு பேருந்தில் டிக்கெட் எடுத்து கொடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்