குஜராத்தில் ஆழ்துளைக்குள் துடித்த 3 வயது சிறுமியின் இதயம்..போராடி வெளியே வந்ததும் பறித்து சென்ற எமன்

Update: 2024-01-02 04:12 GMT

குஜராத்தில், ஆ​ழ்துளை கிணற்றில் தவறி விழுந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டம் ரான் கிராமத்தில், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி ஏஞ்சல் சாக்ரா, தவறி விழுந்தாள். இதையடுத்து சிறுமியை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டனர். 8 மணி நேர போராட்டத்திற்குப்பின் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததால் பொதுமக்கள் சோகமடைந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்