மூதாட்டியிடம் செயின் பறிப்பு! சட்டையை மாற்றி தப்பியோடிய திருடன்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்

Update: 2023-11-21 09:46 GMT

கர்நாடக மாநிலம் ஆனெக்கல் பகுதியில் வசித்துவரும் நாராயணாச்சாரி - அக்கையம்மா என்ற வயதான தம்பதிகள், உடல் சுளுக்கு சரிசெய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெற்றுச் சென்ற நபர் ஒருவர், மீண்டும் பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து, அரிவாளை காட்டி நகையை தருமாறு முதியவர்களை மிரட்டியுள்ளார். மூதாட்டியை அரிவாளால் தாக்கிவிட்டு, தங்கநகையை பறித்து திருடன் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், திருடன் நடந்து செல்வதும், நகையை பறித்த பின்பு சட்டையை மாற்றிக் கொண்டு தப்பியோடுவதும் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடனை போலீசார் தேடிவருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்