தங்கையை அடித்து கொன்ற அண்ணன்... இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தால் நடந்த பயங்கரம்...
சமூகவளைதளம் கட்டுக்கடங்காத பறந்து விரிந்த மாய உலகம்... ஆரம்பத்துல தகவல் பறிமாற்றத்துக்காக பயன்படுத்தப்பட்ட சோஷியல் மீடியா.. காலப்போக்குல மக்களோட பொழுதுபோக்கு சாதனமா மாறிடுச்சு...
பெண்களின் அழகை மெறுகேற்ற பியூட்டி டிப்ஸ், விதவிதமான கைபக்குவத்துல ரெசிபி வீடியோ பாத்துட்டிருந்த காலம்மெல்லாம் மலையேறிபோயி... இப்போ ஒரு நிமிஷத்துல short and sweet-ஆ content பார்க்குற நிலமைக்கு வந்துட்டோம்...
அதுலயும் குறிப்பா, நிறைய பேரோட மனசுக்குள்ள இருந்த ஹீரோ ஹீரோயின் கனவ ரீல்ஸ் நிஜமாக்கியிருக்கு.
இப்படி தானும் ஒருநாள் ஹீரோயின் ஆயிடுவோம்னு நினைச்சி ரீல்ஸ் போட்டுகிட்டு இருந்த பொண்ணுக்கு மரணத்த பரிசா கொடுத்துருக்காரு இங்க ஒரு அண்ணன்.
கொல்லப்பட்டவர் சங்கவி என்ற அஜ்மிரா சிந்து. தெலுங்கானா மாநிலத்திலுள்ள இலந்து மண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர். 22 வயதாகும் அஜ்மிரா அரசு மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக வேலைப்பார்த்து வந்திருக்காங்க.
சமூகவளைதளங்களில் அதீத ஆர்வம் கொண்டிருந்த அஜ்மிரா தினமும் டிசைன் டிசைனாக இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டு வந்திருக்கிறார்.
அதற்கு ur so cute , choo sweet-ன்னு கமண்டுகள் குவிய ஆண் நண்பர்களோடு சேர்ந்தும் லைக்குகாக ரீல்ஸ் வெளியிட்டிருக்காங்க.
பொது வெளியில் அஜ்மிரா பாய் பெஸ்டியோடு நெருக்கமாக இருந்த வீடியோக்கள் அவரது அண்ணன் ஹரிலாலுக்கு ஆத்திரத்தை வர வைச்சிருக்கு.
பலமுறை எச்சரித்தும் அஜ்மிரா அதை பொருட்படுத்தாம, தொடர்ந்து பாய் பெஸ்டிகளோடு ஜாலியா ரீல்ஸ் அப்லோடு பண்ணிட்டு வந்திருக்காங்க.
இதனால கோபத்தின் உச்சிக்கே போன ஹரிலால் பாசக்கிளிகிட்ட கடுமையான வாக்குவாத்துல ஈடுப்பட்டு வந்திருக்காரு.
சம்பவம் நடந்த அன்று, அண்ணன் தங்கை இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கை கலப்பாக மாறியிருக்கிறது. ஒருகட்டத்தில் பொருமையை இழந்த ஹரிலால் உருட்டுக்கட்டையால் அஜ்மிராவின் தலையில் பலமாக தாக்கியிருக்காரு.
அந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அஜ்மிராவ மருத்துவமனையில் சேத்திருக்காங்க. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கு. அப்படியிருந்தும் அஜ்மிராவை காப்பாத்த முடியாமல் போயிருக்கு.
இந்த சம்பவம் தொடர்பாக ஹரிலாலை கைது செய்த போலீசார் கொலை வழக்குப்பதிவுச் செய்து சிறைலடைச்சிருக்காங்க.