"5 வித மலர்கள் மட்டும்.." - கோயில்களுக்கு பறந்த புதிய ஆணை

Update: 2024-05-10 05:08 GMT

கேரளா மாநிலம் ஐயப்பன் கோயில் உட்பட 1200க்கும் மேற்பட்ட கோயில்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகித்து வருகிறது. இந்த நிலையில், தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மல்லி,செம்பருத்தி, துளசி உள்ளிட்ட 5 வித மலர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நிர்வாகம் ஆணையிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், அரளி பூக்களை சாப்பிட்ட கால்நடைகள் இறந்தன. சூர்யா சுரேந்திரன் என்பவர் அரளி இதழ்களை சாப்பிட்டு இறந்த நிலையில், அவரது மருத்துவ அறிக்கையிலும் அது உறுதி செய்யப்பட்டது. இதை சுட்டிகாட்டிய தேவசம் போர்டு, 5 வித மலர்களை மட்டுமே பயன்படுத்த ஆணையிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்